
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரௌபதி.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியானால் மீண்டும் சாதி தொடர்பான மோதல்கள் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
