Connect with us
Vijayakanth

Cinema News

பார்வையிலேயே கரண்ட் ஷாக் கொடுத்த விஜயகாந்த்… அசந்துப்போன எஸ்.ஏ.சி… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா!

விஜயகாந்த்தின் அனல் தெறிக்கும் வசனங்கள் மிகவும் பிரபலமானவை என்றாலும் விஜயகாந்த்தின் கண்கள் மிகவும் கூர்மையானவை. திரைப்படங்களில் அவர் கோபப்படும்போது அவரது பார்வை அனலை கக்குவது போல் இருக்கும். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அவரது கண்களுக்கென்றே தனியாக ஒரு ஷாட் வைப்பார்கள். அந்த அளவுக்கு அவரது பார்வை பவர்ஃபுல்லாக இருக்கும்.

Vijayakanth

Vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்த்தின் கண்கள்தான் அவருக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

1981 ஆம் ஆண்டு விஜயகாந்த், பூர்ணிமா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை”. இத்திரைப்படம் விஜயகாந்த்தின் கேரியரிலேயே திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார்.

Sattam Oru Iruttarai

Sattam Oru Iruttarai

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு, இத்திரைப்படத்திற்கான கதாநாயக தேடலில் எஸ்.ஏ.சி ஈடுபட்டிருந்தபோது, வாஹினி ஸ்டூடியோவிலிருந்து வெளியே ஒரு புல்லட் வண்டியில் தனது நண்பரான ராவுத்தருடன் போய்க்கொண்டிருந்தாராம் விஜயகாந்த்.

S.A.Chandrasekhar

S.A.Chandrasekhar

அப்போது தற்செயலாக எஸ்.ஏ.சி பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்திருக்கிறார். அந்த கண்கள் ஒரு பவர்ஃபுல்லான கண்களாக இருந்ததாம். பார்த்தவுடனே அசந்துப்போய்விட்டாராம் எஸ்.ஏ.சி. உடனே தனது உதவியாளரிடம் அந்த பையனை கூப்பிட்டு வா என்று கூற, அந்த உதவியாளர் ஓடிச்சென்று விஜயகாந்த்தை அழைத்து வந்தாராம்.

“பெயர் என்ன?” என்று கேட்க “விஜயராஜ்” என்று பதிலளித்தாராம் விஜயகாந்த். அதன் பிறகுதான் அத்திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். இந்த சம்பவம் மட்டும் நடைபெறவில்லை என்றால் விஜயகாந்த்தின் கேரியரே வேறு மாதிரி இருந்துக்குமோ என்னவோ!

இதையும் படிங்க: தனுஷ் பாடலை பாடியதால் ரத்த வாந்தி எடுத்த பிரபல பாடகர்… ஒரு அதிர்ச்சி சம்பவம்…

Continue Reading

More in Cinema News

To Top