ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சுப்பா!. எச்.வினோத் இயக்கப் போகும் அடுத்த படம்!..

Published on: February 10, 2023
vino
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி வருகிறார் இயக்குனர் எச்.வினோத். தீரன் அதிகாரம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் எச்.வினோத். இவரின் படங்கள் பெரும்பாலும் சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் அதை தட்டிக் கேட்கும் முறை பற்றியும் அமையும்.

vinoth
vinoth

அது அவர் எடுத்த படங்களிலேயே காணலாம். சமீபத்தில் அவரின் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. வங்கியால் மக்களுக்கு தெரியாமல் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வெளிப்படையாகவே காட்டியிருப்பார் எச்.வினோத்.

துணிவு படத்தின் வெற்றி எச்.வினோத்தை தலை நிமிர பார்க்க வைத்தது. அதனாலேயே அடுத்ததாக அவர் யாரை வைத்து படம் பண்ணப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத் தொடங்கியது. ஏற்கெனவே தனுஷுக்காக கதை வைத்திருப்பதாக கூறி வந்த எச்.வினோத்,

vinoth2
vinoth2

அடுத்து தனுஷை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இப்பொழுது தனுஷை வைத்து எச்.வினோத் படம் எடுக்கவில்லையாம். கமலை வைத்து தான் எடுக்கப் போகிறாராம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிந்து விட்டதாம்.

இதையும் படிங்க : இதனால் தான் விஜயகாந்தை இன்று வரை சந்திக்க வில்லை.. மனம் திறந்த வாகை சந்திரசேகர்..

இன்னும் ஒரு படி மேலாக முன்னதாகவே எச்.வினோத்திற்கு ஒரு காரையும் பரிசாக வழங்கியிருக்கிறாராம் கமல். படம் முடிந்து வெற்றியை கொண்டாடும் போது தான் இந்த மாதிரி அன்பளிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் எச்.வினோத்திற்கு அட்வான்ஸ் மாதிரி இந்த காரை அன்பளிப்பாக வழங்கி ஒகே பண்ணியிருக்கிறாராம்.

vinoth3
vinoth kamal