கடந்த வாரம் திரையரங்குகளில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகியது. ரிலீஸான படங்கள் எல்லாமே அந்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்யவில்லை எனினும் குறிப்பிடத்தக்க படமாக மாறியது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ‘ரன் பேபி ரன்’ திரைப்படம்.
இந்தப் படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் வசூல் சொல்லும்படியாக இல்லையென்றாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தப் படத்தின் மூலம் 10 கோடி வரை லாபம் வந்துள்ளதாம்.

அதனாலேயே மீண்டும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஜியென் கிருஷ்ணகுமாரை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறதாம். மேலும் படத்தின் பட்ஜெட் 12 கோடியாம். ஆனால் சாட்டிலைட் உரிமம் மற்றும் தியேட்டரிக்கல் உரிமம் என கிட்டத்தட்ட 25 கோடி வரை கலெக்ஷனை அள்ளியிருக்கிறது.
இதையும் படிங்க : சம்பளமே வாங்காமல் இசையமைத்த இளையராஜா!.. அட இப்படியெல்லாம் நடந்திருக்கா!…
இந்த லாபத்தால் பலனடைந்தவர்களில் தயாரிப்பாளர் இருக்கிறாரோ இல்லையோ ஆர்.ஜே, பாலாஜி மிகவும் குஷியில் இருக்கிறாராம். ஏற்கெனவே தன்னுடைய சம்பளமாக 4 கொடி வரை பெற்றுக் கொண்டிருந்த ஆர். ஜே.பாலாஜி இந்த படத்தின் மினிமம் வசூலால் தன் சம்பளத்தை அதிகமாக்கியுள்ளாராம்.

அதன் காரணமாக இனி வரும் படங்களில் தன்னுடைய சம்பளத்தை 7 கோடி வரை அதிகரித்துள்ளாராம் ஆர்.ஜே.பாலாஜி. சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகர்கள் கொஞ்சம் கதைகளிலும் கவனமாக இருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கும் மேலாக கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் என்று புலம்பி வருகின்றனர்.





