
ஏ.ஆர்.ரகுமான் தான் உண்டு தான் வேலை உண்டு என இருப்பவர். சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றியெல்லாம் பேசமால் அமைதி காக்கும் சுபாவம் கொண்டவர். அப்படி பிரச்சனைகளை என் தலையில் ஏற்றிக்கொண்டால் அது தன் வேலையை பாதிக்கும் என ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘ ஏழைய பணக்காரனோ குழாயை திறந்தால் தண்ணீர் வர வேண்டும். நாம் பல தேவையில்லாத வேலைகளை செய்து வருகிரோம். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும்’ என அவர் பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Hearty words from @arrahman sir …every human need to get basic needs for their lives awsome speech.#ARRahman pic.twitter.com/94FB0yIKNp
— TweetPanrom (@TweetPanrom) February 18, 2020