Connect with us

Cinema News

என்னது ஏ.ஆர் ரகுமான் இசையில் பாரதிராஜா பாடியிருக்கிறாரா?!. என்னப்பா சொல்றீங்க இது புதுசா இருக்கு..

bharathi raja

பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர். ஆரம்ப காலத்தில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்னர் சூழ்நிலை காரணமாக இயக்குனராக மாறினார். இவர் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர். இவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றளவும் சினிமா துறையில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. அன்று அவர் எடுத்த படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியது. பதினாறு வயதினிலே படத்திற்கு முன் பதினாறு வயதினிலே படத்திற்கு பின் என தமிழ் சினிமாவை பிரித்து பார்க்கும் அளவிற்கு அப்படம் டிரென்ட் செட்டராக மாறியது.

ARR WITH BHARATHI RAJA

தமிழ் சினிமா என்னும் வண்டி நின்ற போது அதற்கு பெட்ரோல் போட்டு மேலே கொண்டுவந்தவன் பாரதிராஜாவை என்று கவிஞர் வாலி கூறுவார். இன்று உச்சபட்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்திலும் மற்றொருபுறம் சப்பாணி கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை நடிக்க வைத்து இருப்பார். இவர் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர், நடிகர் என வலம் வந்தவர்.

PIC 1

ஏ.ஆர் ரகுமான் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளரின் ஒருவர். இவரது இசைப் புரட்சி 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இசையின் ஒலியின் அமைப்பு மாற்றி டிரெண்ட் செட் பண்ணினார். பின்னர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என அனைத்து மொழி படங்களுக்கும் இசையமைத்து வாங்காத விருதுகள் இல்லை. ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். 1994 -ல் இயக்குனர் இமயமும் இசை புயலும் சேர்ந்து வெளியான படம் ”கருத்தம்மா”. இப்படத்தில் வரும் ”காடு பொட்டல் காடு” என்னும் பாடல் பாரதிராஜாவினால் பாடப்பட்டது. இது அவர் பாடிய முதலும் கடைசி பாடல் ஆகும்.

Continue Reading

More in Cinema News

To Top