Connect with us

Cinema News

பாட்ஷாவாக நடிக்க வேண்டிய பெரிய நடிகர்.. மறுத்த ரஜினி.. காரணம் என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரின் புகழ் ஜப்பான் வரை பரவியுள்ளது. அப்படி அயல்நாடு வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். இவர் கேரியரில் சிறந்த படமாக ”பாட்ஷா”வும் தவிற்கமுடியாத ஒன்று. 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்துடன், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசை அமைத்திருப்பார்.

mamotty

இப்படத்தில் முற்பகுதியில் ரஜினி மாணிக்கம் என்ற ஆட்டோ டிரைவர் கேரக்டரிலும் பிற்பகுதியில் மாணிக் பாட்ஷா என்ற தாதா கேரக்டரிலும் நடித்திருப்பார். கதை படி மாணிக்கத்தின் நண்பர் அன்வர் பாட்ஷா இறந்ததனால் அவரின் பெயரை தன் பெயருடன் இணைத்து மாணிக் பாட்ஷா என்று வைத்திருப்பார். இதில் அன்வர் பாட்ஷாவாக நடித்திருந்தவர் சரண்ராஜ் இவருக்கு முன் இந்த கேரட்டருக்கு பரிந்துரைத்த பெயர் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி.அடிப்படையில் அவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் என்பதால் இயக்குனர் மம்மூட்டியை ரஜினியிடம் பரிந்துரை செய்திருக்கிறார்.

saran raj

இதற்கு ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார் காரணம் அப்பொழுதுதான் இருவரும் இணைந்து ”தளபதி” என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்கள். மறுபடியும் அதே காம்பினேஷனில் திரும்ப நடிக்கும் பொழுது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் மம்முட்டியை நிராகரித்துள்ளார் ரஜினி. பின்னர் அந்த கதாபாத்திரத்திற்க்கு சரண்ராஜ் பெயரை இயக்குனரிடம் பரிந்துரை செய்திருக்கிறார் . இவர் இதற்கு முன் ரஜினியுடன் பணக்காரன் முதல் வீரா வரை சுமார் ஐந்து படங்கள் பணியாற்றியுள்ளார். இது இவரது ஆறாவது படமாக அமைந்தது. பின்னர் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. மேலும் ரஜினிக்கு ஜப்பான் வரை ரசிகர்களை சேகரித்தது.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top