எப்படி நடிச்சாலும் படம் ஓட மாட்டேங்குது சார்!.. நடிகரிடம் புலம்பிய அஜித்!. .

Published on: February 14, 2023
ajith
---Advertisement---

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்ல. கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து மேலே வருவதும் சாதாரண விஷயமல்ல. வாய்ப்புக்காக போராடுவது ஒருபக்கம் எனில், வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்புகள் வராது. சினிமாவில் ரஜினி முதல் பல நடிகர்களும் இதை சந்தித்துள்ளனர்.

அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்துள்ளார். அதாவது காதல் கதைகளில் மட்டுமே நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது.

ajith

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறிய நடிகர் ராஜேஷ் ‘அஜித்துடன் வரலாறு உள்ளிட்ட 6 படங்களில் நடித்துள்ளேன். மிகவும் அழகாக இருப்பார், ஓப்பனாக பேசுவார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிக்கு பின் நான் ஒரு முகத்தை பார்த்து ரசித்தேன் என்றால் அது அஜித் மட்டுமே. ஒருபடத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ‘எப்படி நடித்தாலும் படம் ஓட மாட்டேங்குது சார்’ என ஒரு குழந்தை போல என்னிடம் சொன்னார். பொதுவாக நடிகர்கள் அப்படி சொல்லமாட்டார்கள். ஆனால், அஜித் ஓப்பனாக பேசினார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அது என்னவோ அவருடன் அதிகம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கும் அமையவில்லை’ என அந்த பேட்டியில் ராஜேஷ் கூறினார்.

rajesh
rajesh

அஜித் சாக்லேட் பாயாக நடித்தவரை மட்டுமே அவருக்கு தோல்விப்படங்கள் அமைந்தது. அவர் ‘ பில்லா’ படத்தில் நடிக்க துவங்கி ஆக்‌ஷன் ஹீரோவாக எப்போது மாறினாரோ அதன்பின் அவரின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகிவிட்டது. அதுவும் மங்காத்தா படத்தின் வெற்றி அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. தற்போது விஜயுடன் போட்டி போடும் அளவுக்கு மாஸ் ஹீரோவாக அஜித் மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியின் பேரனுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. சத்யராஜ் சொன்னதை உண்மையாக்கிய தனுஷ்!..