கல்லடி பட்ட பாம்பு சும்மா இருக்குமா?.. படமெடுத்த விக்னேஷ்சிவன்.. ஏகே 62க்கு எதிராக தரமான கூட்டணி..

Published on: February 22, 2023
ajith
---Advertisement---

கடந்த சில மாதங்களாக இணையத்தில் மிகவும் டிரென்டாகினார் விக்னேஷ்சிவன். ஏதோ பெரிய அநீதி ஏற்பட்டதை போல அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ்சிவன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிரபலமாக்கி வந்தனர். அதற்கு பின்னனியில் அமைந்த காரணமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ajith1
ajith mahil thirumeni

கதையில் சொதப்பல் செய்த விக்னேஷ்சிவனை லைக்கா நிறுவனம் நிராகரித்தது. மேலும் அந்தக் கதை அஜித்திற்கும் பிடிக்காமல் போனதால் ஏகே 62வில் இருந்து விலக்கப்பட்டார். திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஒரு இயக்குனர் திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் முதல் பிரபலங்கள் மத்தியில் ஒரு வித தாங்கமுடியாத உணர்வாகத்தான் இருக்கும்.

அந்த ஃபீலிங்க்ஸில் இருந்த விக்னேஷ்சிவனுக்கு திரையுலகினர் சில ஆறுதல்களும் கூறிவந்தனர். விஜய்சேதுபதி தானாக முன்வந்து ‘ நாம் சேர்ந்து படம் பண்ணலாம்’என்று சொன்னதாக தகவல்கள் வெளியானது. உடனே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்தப் படமாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற செய்தி வைரலானது.

ajith2
ajith vijay sethupathi

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்காக வைத்திருந்த கதைதான் அஜித்திற்கு சொன்னதாகவும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் அது ஒரு காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாகக் கூட இருக்கலாம் என்று தெரிகிறது. ஏகே 62 கை நழுவிப் போனதை அடுத்து அதற்கு சவால் கொடுக்கும் விதமாக எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என எண்ணிய விக்னேஷ் சிவன்,

தன் கூட்டணியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் சாதனை பெற்ற படமான ‘லவ் டுடே ’ படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனை தன்னுடன் இணைத்துக் கொண்டாராம். அதாவது படத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிக்கப் போவதாக 90% பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாம்.

ajith3
pradeep renganathan

ஒரு பக்கம் விஜய்சேதுபதி, ஒரு பக்கம் பிரதீப் ரெங்க நாதன் என தன் பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் விக்னேஷ்சிவன். மேலும் பிரதீப் ரெங்கநாதன் ஏற்கெனவே ஏஜிஎஸுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்த நிலையில் அடுத்தப் படத்திற்கும் பிரதீப் ரெங்கநாதனையே கமிட் செய்திருந்தது. ஆனால் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் இங்கு நடிக்கிறார். அதே நேரம் ஏஜிஎஸுக்கு படத்தை இயக்கி நடிப்பார் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் வருகின்றன.

இதையும் படிங்க : பாரதிராஜா எடுத்த ஃப்ளாப் படத்தை பிளான் பண்ணி ஓட வைத்த எம்.ஜி.ஆர்… இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்களோ?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.