தமிழ் சினிமாவில் ஒரு உயரத்தை அடைகிற வரைக்கும் கிடைக்கிற சம்பளத்தில் அளவுக்கு மீறி நடிப்பதும் எதிர்பாராத உயரத்தை அடைந்த பிறகு காலால் மிதிப்பதும் என காலந்தொட்டு இருக்கிற வழக்கமாக இருக்கிறது. இது ஒரு சில பேரிடம் இருக்கும் குணமாகவே கருதப்படுகிறது.

இன்று பல நடிகர் நடிகைகளிடம் கொட்டிக் கிடக்கும் பணம் பல பேருக்கு உதவும் வகையில் அமைந்தாலும் மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு என்பதை போல தாமாக முன்வந்து செய்தால் தானே பலன் கிடைக்கும். சமீபத்தில் காலமான மயில்சாமி கூட தனக்கு வரும் சம்பளத் தொகையான லட்ச ரூபாயில் வெறும் 5000 ரூபாயை மட்டுமே வீட்டிற்கு கொண்டு போவாராம்.
மீதமுள்ள பணத்தை தன் கூட நடிக்கும் அடிமட்டத்தில் இருக்கும் நடிகர்களுக்கும் உதவியின்றி தவிக்கும் மக்களுக்கும் கொடுத்து மகிழ்வாராம். இப்படியும் ஒரு சில மனிதர்கள் இருக்கும் நிலையில் சூட்டிங்கிற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் எல்லா டெக்னிஷியன்களும் கூடிய நிலையில் பணம் கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று ஒரு நடிகை கூறியிருக்கிறார்.

அது யாருமில்லை. நடிகை சரிதா. 80களில் கொடிகட்டிப் பறந்த நடிகை தான் சரிதா. குடும்ப படமா சரிதாவை கூப்பிடு என்று சொல்லுமளவிற்கு ஹோம்லியான தோற்றம் , கலர் கருப்பு என்றாலும் அதிலும் ஒரு தனி அழகு என சினிமாவை ஒரு காலத்தில் தன் கையில் வைத்திருந்தார். நடிகர் தியாகராஜனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘மலையூர் மம்பட்டியான்’ என்ற திரைப்படம்.
இந்த படத்தில் சரிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். திருப்பதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட அனைவரும் படப்பிடிப்பிற்கு போக சரிதா முதலில் பேமெண்ட் அப்புறம் தான் நடிப்பு என்று சொல்லியிருக்கிறார். அதற்காக திருப்பதிக்கு போனவர்கள் மூன்று நாள் சூட்டிங் நடத்தாமல் சும்மாவே இருந்திருக்கின்றனர்.

இந்தப் படமே சிறிய அளவிலான முதலீட்டில் நண்பர்கள் சேர்ந்து சிறுக சிறுக பணம் போட்டு படத்தை எடுக்க திட்டமிட்ட படம். சரிதா இப்படி சொன்னதும் பிரபல தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இவரும் இந்தப் படத்திற்கு ஒரு தயாரிப்பாளர் மாதிரியே உதவி செய்தவர் தான். இவர் தன் மனைவி கட்டியிருந்த தாலியை கழட்டிவிட்டு பதிலுக்கு மஞ்சள் கயிறு கட்ட சொல்லிவிட்டு அந்த தாலியை அடகு வைத்து அதன் பிறகே சரிதாவிற்கு பணத்தை கொடுத்திருக்கின்றார். பிறகு சரிதாவை ஃபிளைட்டில் ஏற்றி அனுப்பி விட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். இப்படியும் ஒரு சில மனிதர்கள். இந்த தகவலை அழகன் தமிழ்மணி ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : டைரக்டர் யார் என்றே தெரியாமல் கதை எழுதிய கே.எஸ்.ரவிக்குமார்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்டு!