
Cinema News
சின்னத்தம்பி படத்தில் மனோராமா வேண்டாம்!.. யோசித்த பி.வாசு.. நடந்தது இதுதான்!..
Published on
By
பிரபுவுக்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.வாசு. இவரின் இயக்கத்தில் பிரபுவும், குஷ்புவும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். பி.வாசு – பிரபு – குஷ்பு கூட்டணி என்றாலே அப்படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. மேலும், பி.வாசுவின் படங்களுக்கு இளையராஜா இசை என்பதால் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும். மேலும், கவுண்டமணி – செந்திலையும் வைத்து காமெடிகளில் அதகளம் பண்ணியிருப்பார்.
chinna thambi
இவரின் இயக்கத்தில் பிரபுவும், குஷ்புவும் இணைந்து நடித்த திரைப்படம் சின்னத்தம்பி. 1991ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. பிரபு – குஷ்பு காம்பினேஷன் ரசிகர்களை கவர துவங்கியது இந்த படத்தில் இருந்துதான்.
சின்னத்தம்பி திரைப்படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக மனோரமா நடித்திருப்பார். இவரின் கதாபாத்திரமும் அப்படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மனோராமா வரும் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தது. ஆனால், இந்த படத்தில் மனோரமாவை நடிக்க வைக்க வேண்டாம் என பி.வாசு நினைத்தாராம்.
அதற்கு காரணமும் இருக்கிறது. இந்த படத்திற்கு முன்பு பி.வாசு இயக்கிய திரைப்படம் நடிகன். அப்படத்தில் சத்தியராஜை பார்த்து ஜொள்ளுவிடும் வேடத்தில் மனோரமா நடித்திருப்பார். எனவே, ரசிகர்கள் அப்படி பார்த்த மனோரமாவை செண்டிமெண்டான அம்மா வேடம் எனில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் பி.வாசுவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் அதையெல்லாம் மறந்துவிடுவார்கள் என அவரை மனோரமா சம்மதிக்க வைத்துதான் சின்னத்தம்பி படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு தளதளன்னு இருக்கு!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மிர்னாளினி ரவி…
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...