ஊட்டி குளிரில் உடம்பில் துணி இல்லாமல் எம்.ஜி.ஆர் செய்த காரியம்… அரண்டுப்போன படக்குழுவினர்…

Published on: February 24, 2023
MGR
---Advertisement---

எம்.ஜி.ஆர் தனது உடலை மிகவும் ஆரோக்கியமாக மெயின்டெயின் செய்பவர். ஆதலால்தான் அவரால் 60 வயதிலும் ஒரு இளைஞனை போல சுறுசுறுப்பாக இருக்க முடிந்தது. இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அதிகாலை தனது உடல் ஆரோக்கியத்திற்காக அவர் செய்த செயல் குறித்தும் அதனை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தது குறித்தும் இப்போது பார்க்கலாம்.

Anbe Vaa
Anbe Vaa

1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்பே வா”. இத்திரைப்படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இத்திரைப்படத்தில் “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலின் சில காட்சிகள் ஊட்டி பகுதியில் படமாக்கப்பட்டன. அப்போது ஒரு நாள் அதிகாலை படப்பிடிப்பு நடக்கும் இடத்தை பற்றி கூறுவதற்கு எம்.ஜி.ஆர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஏவிஎம் சகோதரர்கள் சென்றார்களாம்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஏவிஎம் சகோதரர்கள் ஊட்டியின் அதிகாலை  குளிர் தாங்கமுடியாமல் ஸ்வெட்டர் அணிந்துகொண்டும் கைகளில் கையுறைகள் அணிந்துகொண்டும் வந்திருந்தார்களாம். ஆனால் எம்.ஜி.ஆரோ மேலாடை அணியாமல் கர்லா கட்டையை சுழற்றிக்கொண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தாராம்.

MGR
MGR

அப்போது ஸ்வெட்டர் அணிந்து வந்திருந்த ஏவிஎம் சகோதரர்களை பார்த்த எம்.ஜி.ஆர், “இந்த வயசுலயே இப்படி ஸ்வெட்டர் போட்டு அலையுறீங்களே. என்னைய பாருங்க. நான் சட்டையே போடல. எனக்கு குளிரவும் இல்லை. இந்த வயசுல என்னை மாதிரி உடற்பயிற்சி செய்யனும். ஆனா நீங்க என்னென்னா இப்படி ஸ்வெட்டர் போட்டு முழுசா மூடிட்டு வர்ரீங்க” என்று அறிவுரை கூறினாராம்.

அக்காலகட்டத்தில் ஏவிஎம் சகோதரர்கள் இளைஞர்களாக இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்போது 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் அமீர்… என்ன ஆகப்போகுதோ தெரியலயே!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.