
கேரளாவில் குழந்தை அழுகையை நிறுத்தாததால் அதை பாறையில் மோதிக் கொன்றதாக ஒரு தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள கண்னூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் பிரனவ் மற்றும் சரண்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்றொரு மகன் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தங்கள் மகனைக் காணவில்லை என தம்பதிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்த குழந்தையின் சடலம் தம்பதிகளின் வீட்டுக்கு அருகே உள்ள கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் குழந்தையின் பெற்றோர் மீதே சந்தேகம் ஏற்பட அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்துள்ளனர். இதில் பீதியடைந்த சரண்யா குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் விசாரணையில் ‘சம்பவ தினத்தன்று குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். ஆனாலும் குழந்தை அழுகையை நிறுத்தாததால் ஆத்திரத்தில் பாறையில் மோதி கடலில் வீசிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவரது கணவர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.