3 சகாக்களை இழந்துவிட்டேன் – விபத்து குறித்து கமல் உருக்கம் !

bf73b177b9eabbd5ef3a0bb85e3abc05

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து கமல் தனது சமூகவலைதள பக்கத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றிரவு சென்னை பூந்தமல்லியில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் சந்திரன் மற்றும் கலை உதவி இயக்குனர் மது ஆகிய மூன்று பேரும் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் கமல் தனது சமூகவலைதளப் பக்கத்தில்’ எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment