Cinema History
வரலாறு படைத்த மணிவண்ணன்-சத்யராஜ்-இளையராஜா காம்போ.. அது என்னன்னு தெரியுமா..?
மணிவண்ணன் தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனைகளை கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். 1978 ஆம் ஆண்டு ”கிழக்கே போகும் ரயில்” என்னும் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சினிமா மீது நாட்டம் வர செய்தது. இதனால் தன் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டுட்டார். பின்னர் இயக்குனர் பாரதிராஜாவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர் கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளார். பாரதிராஜா மனம் கவர்ந்தார் பின்னர் இவரை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
1979 ஆம் ஆண்டு பி.எஸ்.நிவாஸ் இயக்கத்தில் ”கல்லுக்குள் ஈரம்” என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் இணைந்தார். பின்னர் பாரதிராஜா உடன் இரண்டு ஆண்டுகள் பயணித்து திரைப்பட கலையை கற்றுக்கொண்டு 1982 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் பல வெற்றி திரைப்படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இவர் பல படங்களை இயக்கியிருந்தாலும் மக்கள் மனதில் ஒரு நடிகராக தான் அடையாளம் காணப்பட்டார்.
இவருக்கும் நடிகர் சத்யராஜிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே கல்லூரியில் பயின்றனர். பயிலும் போது ஏற்பட்ட நட்பு தான் பிற்காலத்தில் சினிமா வாழ்க்கையில் இணையச் செய்தது. சத்யராஜ் இவர் ஒரு தீவிர எம்ஜிஆரின் ரசிகன் ஆவார் அதனால் அவருக்கு படிப்பில் நாட்டம் குறைந்து. தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று நினைத்தார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து சினிமா பயணத்தை தொடங்குகிறார். பின்னர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், சத்யராஜ் நடிப்பில் இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. அதில் ஒன்று ”பாலைவன ரோஜாக்கள்” மற்றொன்று ”விடிஞ்சா கல்யாணம்” இரண்டு படங்களும் தீபாவளி அன்று வெளியாகி நூறு நாட்கள் கடந்து ஓடின. அன்றைய காலத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தலைமையில் நூறாவது நாள் விழா எடுக்கப்பட்டது. இதில் ”பாலைவன ரோஜாக்கள்” திரைப்படத்தின் சத்யராஜ் உடன் பிரபு இணைந்து நடித்திருப்பார். மேலும் அதே தினத்தன்று பிரபுவின் மற்றொரு படமான ”அறுவடை நாள்” என்ற திரைப்படம் அதே நாளில் வெளியானது. இப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.
அதுவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இவர்களின் கூட்டணியில் உருவான இரண்டு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அடைந்து. என்ற வரலாறுகளை படைத்த பெருமைக்குரியவர்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடும். அதனால் ஒரே தேதியில் இரு படங்கள் இறங்கினாலும் மக்கள் முதலில் ஒரு படத்திற்கும் மற்றொரு வாரத்தில் அடுத்த படத்திற்கும் சொல்வார்கள்.
அன்றைய காலகட்டத்தில் அப்படி நிலைமை இருந்தது. ஆனால் இன்று எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் மூலம் தான் அந்தப் படத்தின் வசூலை வைத்து வெற்றியை தீர்மானிக்கப்படுகிறது. இன்று ஒரே தேதி தேதியில் இரு நடிகர்களின் படம் வெளி வந்தால் ரசிகர்கள் தனித்தனியாக பிரிந்து படத்தின் வசூலை பாதிக்கும் நிலைமை உள்ளது.