உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ !

03883f7687f1ea80b1a0084be005c9ca

குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாக்கபட்டு வரும் மிகப்பெரிய மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்தான் உலக அளவில் பெரிய மைதானமாக இருந்து வருகிறது. அதை மிஞ்சும் வகையில் குஜராத்தில் மைதானம் 63 ஏக்கர்களில், 110,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. 700 கோடி ரூபாய் புதிய மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இப்போது அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. கையில் அணியும் மோதிரம் போன்ற தோற்றத்தைக் கொண்டு இருப்பதால் இதனை மோதிர மைதானம் எனவும் அழைக்கின்றனர் ரசிகர்கள். இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories Uncategorized

Leave a Comment