ஹிந்தி படம் மூலம் நடிப்பு கேரியவை துவங்கியவர் ராஷி கண்ணா. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். அங்கு சில திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், சர்தார், திருச்சிற்றம்பலம் என சில படங்களில் நடித்தார்.

தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். யோதா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அதிகமாக நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா, கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






