விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த உப்பன்னா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார்.

ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய தெலுங்கு திரைப்படமான வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் சூர்யா – பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு டிராப் ஆகிவிட்டது.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்புகளை பெற புதுசுபுதுசா உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சைனிங் கன்னத்தை காட்டி அவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

