புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா ? – அடுத்தடுத்து இரட்டை சதமடித்த டிராவிட்டின் மகன் !

Published on: February 20, 2020
---Advertisement---

5cb5cfb4ed815f7e1d011cd409557b24

இந்திய கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் கடந்த 2 மாதங்களில் இரண்டு இரட்டை சதங்களை எடுத்துக் கலக்கியுள்ளார்.

இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட டிராவிட்டின் மூத்த மகன் சமீத்.  14 வயதாகும் இவர் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்ப்டும் பி.டி.ஆர் ஷீல்டு போட்டிகளில் கலந்துகொண்டு மல்லையாவின் அணி சார்பாக விளையாண்டு வருகிறார்.

ஸ்ரீ குமரன் குழந்தைகள் அகாடமி அணிக்கு எதிராக நடந்த சமித் 146 பந்துகளை சந்தித்து 33 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் சேர்த்தார். இதனால் அவரது அணி 50 ஓவர்களில் 377 ரன்களை சேர்த்தது. பின்னர் பவுலிங்கிலும் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். இதனால் சமீத்தின் அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போட்டியிலும் சமித் டிராவிட் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment