
Cinema News
இந்த நடிகருக்காக திருப்பதி வரை நடந்தே சென்ற தேங்காய் சீனிவாசன்!.. என்ன ஒரு நட்பு பாருங்க?..
Published on
By
தமிழ் சினிமாவில் எத்தனையோ சிரிப்பு நடிகர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் ஒரு சிலரை மட்டுமே நம் நியாபகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அப்படி பட்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். மக்களை எந்த அளவுக்கு அழ வைக்கனுமோ அப்படி அழ வைக்கக் கூடிய சிரிப்பு நடிகர் தான் தேங்காய் சீனிவாசன்.
சிரிப்பையும் தாண்டி குணச்சித்திர வேடங்களில் தன் பிரதான நடிப்பை வெளிப்படுத்தியவர். வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஏற்புடையவர். இப்படி பன்முகத்திறமைகளை தன்னுள் அடக்கி ஆண்டவர் தான் தேங்காய் சீனிவாசன். பெரும்பாலும் ஹீரோக்களுக்கு தான் திருப்பு முனையாக ஒரு சில படங்கள் அமையும்.
srinivasan
ஆனால் ஒரு காமெடி நடிகருக்கு அவரின் நடிப்புத்திறமையால் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது ‘தில்லு முல்லு’ திரைப்படம். இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசனின் ஏமாறும் தன்மை மற்றவர்களை ரசிக்க வைக்கும் படியாக அமைந்தது.
இப்படி பல பரிமாணங்களில் ஜொலித்த தேங்காய் சீனிவாசன் நடிப்பையும் தாண்டி மற்றவர்களிடம் பழகுவதில் மிகவும் மென்மையானவராகவும் இருந்திருக்கிறார். அனைவருக்கும் பிடித்த மனிதராகவே இருந்திருக்கிறார். 80கள் வரை இருந்த நடிகர்கள் பெரும்பாலும் ஈகோ இல்லாமல் போட்டிகள் பொறாமைகள் இல்லாமல் தங்கள் உறவுகளை நல்ல முறையில் சீர்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களிடம் அதை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றது.
venniradai moorthy
அந்த வகையில் தேங்காய் சீனிவாசனின் ஒரு நல்ல பண்பை குறிப்பிட்டு சொன்ன நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறினார். ஒரு சமயம் வெண்ணிறாடை மூர்த்திக்கு ஆஞ்சியோ பண்ணியிருந்தார்களாம். அதற்காக மூர்த்தி மருத்துவமனையில் இருந்தாராம்.
இதையும் படிங்க : வாரிசு படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் பண்ணதுக்கு இதுதான் காரணம்?… ஓப்பனாக போட்டுடைத்த பிரபல படத்தொகுப்பாளர்…
அவருக்காக தேங்காய் சீனிவாசன் திருப்பதி வரை நடந்தே சென்று தரிசனம் செய்து விட்டு வந்தாராம். வந்ததும் மூர்த்தியிடம் இனிமேல் உனக்கும் ஒன்றும் ஆகாது என்று கூறினாராம். வெங்கடாசலபதி பக்தரான தேங்காய் சீனிவாசனின் இந்த நட்பை பற்றி இன்றளவும் கண்கலங்கி பேசினார் வெண்ணிறாடை மூர்த்தி.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....