கே.எஸ் ரவிக்குமாரின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட நபர்.. விரைந்த போலீஸ்.. நடந்தது தெரியுமா?..

By Hema
Published on: March 6, 2023
ks ravikumar
---Advertisement---

1985 ஆம் ஆண்டு காமெடி ஜாம்பவான் நாகேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பார்த்த ஞாபகம் இல்லையோ” இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் “ஆனந்த் பாபு” நடித்திருப்பார் மற்றும் கதாநாயகியாக நடிகை “ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்”. மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பார். இப்படத்தின் பாடல் காட்சியின் நடன அமைப்பு ஒத்திகை நாகேஷின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இப்பாடலுக்கு நடனம் அமைப்பாளராக சுந்தரம் மாஸ்டர் இருந்தார். கே.எஸ் ரவிக்குமார்  உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

arun baabu with ramyakrishnan
arun baabu with ramyakrishnan

அன்றைய தினத்தன்று எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அன்று நாகேஷ் வீட்டின் நுழைவாயில் பகுதியில் அவரது கடைசி மகன் சிறிய விளையாட்டு துப்பாக்கி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டுத்தனமாக தப்பு தப்பாக சூட்டு கொண்டு இருந்தார் அச்சிறுவன். அப்பொழுது அங்கு வந்த கே.எஸ்.ரவிக்குமார் ”துப்பாக்கியை இங்க குடு நான் சரியாக சுடுறேன்” என்றார். பின்பு அனைத்தையும் கச்சிதமாக சுட்டு காண்பித்தார். ஏனென்றால் பள்ளியில் அவர் படிக்கும்போது என்.சி.சி மாஸ்டராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுடும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.

arun baabu with ramyakrishnan
arun baabu with ramyakrishnan

இதை பால்கனியில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் ரம்யா கிருஷ்ணனின் அம்மா. வீட்டின் நுழைவாயில் முதல் பால்கனி வரையில் சுமார் 500 மீட்டர் தொலைவு இருக்கும். ரம்யா கிருஷ்ணன் தாயார் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ”என் கையை குறி பார்த்து சூடு” என்று சவால் விடுகிறார். அவரது கை தோள்பட்டைக்கு நேராக வைத்திருந்தார். ரவிக்குமார் குறிப்பார்த்து சுடும் பொழுது தவறுதலாக தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அன்று அவர் வெள்ளை நிற உடை அணிந்து இருந்ததால் ரத்தம் சிவப்பு கலரில் பளிச்சென்று தென்பட்டது. ஒத்திகை முடித்துக் கொண்டு ரம்யா கிருஷ்ணனும் அருண் பாவும் கீழே இறங்கி வந்தார்கள். இதை கண்டவுடன் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

துப்பாக்கி குண்டில் இடம் பெற்றிருப்பது ஈயம் புல்லட் என்று கேள்விப்பட்டவுடன் பதறிப் போனார் ரவிக்குமார். உடனே ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணன் தாயாரை பைக்கில் அமரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அறுவை சிகிச்சை கொண்டு அந்த புல்லட் அகற்றப்பட்டது. அன்று இரவு கே.எஸ். ரவிக்குமாரின் வீட்டிற்கு போலீஸ் வந்தது. ரம்யா கிருஷ்ணன் தாயாரை உங்களது மகன் சுட்டு விட்டார் என்று அவர் தந்தையிடம் போலீஸ் கூறினார். இதைக் கேட்டு அவர் தந்தை அதிர்ச்சடைந்தார். இந்த கம்ப்ளைன்ட் மருத்துவமனையில் இருந்து வந்தது என்றும் இது விளையாட்டுத்தனமாக நடந்த காரியம் என்று ரம்யா கிருஷ்ணன் தாயார் ஸ்டேட்மெண்ட் எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று அந்த காவலர் விபரத்தை எடுத்துக் கூறினார்.

nagesh with ks ravikumar
nagesh with ks ravikumar

நீங்களும் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கையெழுத்து போட்டு தாருங்கள் என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு அந்த காவலர் அங்கிருந்து சென்று விட்டார். பின்பு அவரது தந்தை பளார் என்று விட்டதில் சுருண்டு சோபாவில் விழுந்தார் ரவிக்குமார். இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் பிற்காலத்தில் பஞ்சதந்திரம், படையப்பா,பாட்டாளி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

Hema

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.