
Cinema News
அர்ஜூனுக்கு ஒரு சூப்பர் ஹிட்!.. சங்கர் குரு ஹிட்டுக்கு பின்னால இதுவெல்லாம் நடந்ததா!…
Published on
By
தமிழ் சினிமாவில் பாரம்பரிய சினிமா நிறுவனமாக இருந்து வருவது ஏவிஎம் நிறுவனம். தமிழ் சினிமா துவங்கிய காலத்தின் முதலே திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் இது. சிவாஜியின் முதல் படமான பராசக்தி திரைப்படத்தையே தயாரித்த நிறுவனம் இது. சினிமா என்றாலே ஏவிம் நிறுவனம்தான் என பலரும் நினைத்த காலமெல்லாம் உண்டு. சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் ஏவிஎம் உருண்டையை ஏக்கத்துடன் சாலையில் நின்று பார்ப்பார்கள். இப்போதும் அது நடப்பதுண்டு.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏவி மெய்யப்பட்ட செட்டியார் பல சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். அவருக்கு அவருக்கு பின் அவரின் மகன்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், குமரன் ஆகியோர் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
avm saravanan
ஏவிஎம் சரவணன் ஒரு முறை ஒரு வங்காள படத்தை பார்த்துள்ளார். அப்படம் வங்காளத்தில் ஹிட் அடித்த ஒரு திரைப்படமாகும். அப்படத்தின் கதை, திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அப்படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் எடுக்கலாம் என நினைத்த சரவணன் அதற்கான உரிமையை அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டார். ஆனால், அவர் அதிக விலை சொன்னதால் அந்த முயற்சியை கைவிட்டார்.
arjun
ஆனால், அந்த கதை அவரின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படத்தின் கதையை தனக்கு நெருக்கமானவர்களின் விவாதித்து வந்துள்ளார். அதன்பின் இயக்குனர் மற்றும் நடிகர் விசுவை அழைத்து அந்த கதையை சொல்லி, இதை தமிழுக்கு ஏற்றமாதிரி ஒரு புது கதையாக எழுதி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்படி விசு உருவாக்கிய கதைதான் அர்ஜூன், சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்து ஹிட் அடித்த ‘சங்கர் குரு’. இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த தகவலை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ட்ராவியா இருக்கு செல்லம்!.. முடிஞ்ச வரைக்கும் காட்டும் ஸ்ருதிஹாசன்…
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....