பாலாவால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்.. காப்பாற்றிய சூர்யா… அட பெரிய மனசுதான்!..

Published on: March 6, 2023
suriya
---Advertisement---

திரைத்துறையில் வளரவேண்டுமெனில் மற்றவர்களின் உதவி கண்டிப்பாக வேண்டும். இயக்குனர்கள் எனில் அவர்களை நம்பும் தயாரிப்பாளர்கள் வேண்டும். நடிகர்கள் எனில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதரவு வேண்டும். ஆனால், அப்படி வளர்ந்தாலும் எல்லோரும் நன்றியுணர்ச்சியுடன் எல்லாம் இருக்க மாட்டார்கள். சிலர் மட்டுமே மற்றவர்கள் செய்த உதவியை மனதில் வைத்து உதவிகள் செய்வார்கள்.

pitha magan
pitha magan

அதில் சூர்யாவும் ஒருவர். நந்தா, பிதாமகன் என தன்னை வைத்து இரு படங்கள் இயக்கிய ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய பாலாவுக்கு வணங்கான் என்கிற படத்தை கொடுத்தார். சூர்யாதான் அப்படத்தை தயாரித்தார். ஆனால், கதையை சரியாக எழுதி முடிக்காமல் படப்பிடிப்பு நடந்ததால் கடுப்பாகி அப்படத்தை டிராப் செய்தார்.

durai
durai

இந்நிலையில், பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் துரை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான நீரிழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் தவிக்கும் துரை தனக்கு திரையுலகின் உதவ வேண்டும் என வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு நடிகர் சூர்யா ரூ.2.38 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார்.

Suriya
Suriya

பிதாமகன் திரைப்படம் தயாரிப்பாளர் துரைக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தி கூறியதை விட அதிக செலவு வைத்தார் இயக்குனர் பாலா. எனவே, அப்படத்திற்கு பின் நலிந்துபோன தயாரிப்பாளர் துரை தற்போது மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகிறார்.

தயாரிப்பாளர் துரை பிதாமகன் மட்டுமில்லாமல் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, கஜேந்திரா ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடுங்குளிரில் விஜய் செய்த வேலை!.. மிரண்டு போன லியோ படக்குழு!…