
சங்கத்தலைவன் படத்தின் ஆடியொ ரிலிஸ் விஷாவில் பேசிய கருணாஸ் கர்ணன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி நான் எதுவும் புகார் கொடுக்கவில்லை என சொல்லியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் திரைப்படத்தில் தென் மாநிலங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மணியாச்சி சாதி கலவரத்தைப் பற்றி காட்சிகள் உள்ளதாகவும் அதனால் அமைதியாக இருக்கும் சமூக சூழல் பாதிக்கப்படும் எனவும் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகர் கருணாஸ் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்துள்ள சங்கத்தலைவன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட கருணாஸ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். விழாவில் பேசிய அவர் ‘நான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் யார் யாரோ கொடுக்கும் குரலை என் குரலென்றால் எப்படி?’ என்று கர்ணன் படத்தின் தடை சம்மந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.





