Connect with us
Vinu Chakravarthy

Cinema History

விணு சக்ரவர்த்தி வாழ்க்கையையே மாற்றிய அந்த ரயில் பயணம்… ஒரு சிகரெட்தான் காரணமே!…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த விணு சக்ரவர்த்தி, தொடக்கத்தில் காவல்துறையில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ரெயில்வே போலீஸில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை மைசூருக்கு இடமாற்றி இருந்தார்கள்.

Vinu Chakravarthy

Vinu Chakravarthy

ஒரு நாள் மைசூருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது சக பயணி ஒருவர், ஒரு விலை உயர்ந்த சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்திருக்கிறார். பிரபல இயக்குனரான ஸ்ரீதரும் இதே பிராண்ட் சிக்ரெட்தான் பிடிப்பார் என்பதால் விணு சக்ரவர்த்தி அவரையே பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.

அப்போது அவர், விணு சக்ரவத்தியிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கினாராம். அப்போதுதான் விணு சக்ரவர்த்திக்கு தெரிந்திருக்கிறது அவர் யார் என்று. அதாவது கன்னட திரைப்பட உலகின் முன்னணி இயக்குனராக திகழ்ந்த புட்டன்ன கனகல்தான் அவர்.

Puttanna Kanagal

Puttanna Kanagal

விணு சக்ரவர்த்தி தனது இளம் வயதிலேயே பல நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு சினிமா ஆசையும் உண்டு. இதனை புட்டன்ன கனகலிடம் கூறியிருக்கிறார். உடனே தன்னிடம் வந்து உதவி இயக்குனராக சேரும்படி புட்டன்ன கனகல் கூறியிருக்கிறார். அதன் பிறகு புட்டன்ன கனகலிடம் பல திரைப்படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் விணு சக்ரவர்த்தி.

Vinu Chakravarthy

Vinu Chakravarthy

இதனை தொடர்ந்துதான் விணு சக்ரவர்த்தி “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்திற்கு கதாசிரியராக பணியாற்றினார். மேலும் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” என்ற திரைப்படத்திலும் நடிகராக அறிமுகமானார். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இயக்குனர் புட்டன்ன கனகலிடம்தான் இயக்குனர் பாரதிராஜாவும் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பதுதான்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top