
ஒரு சிறுவனும், சிறுமியும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கீப்பராக ஒரு நாய் நிற்கிறது. சிறுவன் பந்தை போட்டதும் சிறுமி அடிக்கிறார். பால் எங்கு சென்று விழுகிறதோ அங்கே நாய் சென்று அதை தனது வாயால் கவ்வி சிறுவனிடம் கொடுத்து விட்டு மீண்டும் தனது கீப்பர் பணியை துவங்குகிறது. இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை நடிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ சிறந்த பீல்டர் விருது இவருக்கு கொடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
An award for the Best Fielder of the Year!! pic.twitter.com/7PWBLBgnnV
— Simi Garewal (@Simi_Garewal) February 20, 2020





