
பாலிவுட் நடிகை கியரா அத்வானி சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
பாலிவுட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. கிளாமர் நடிப்பு என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் அவர், சமீபத்தில் தான் வெளியிட்ட ஒரு புகைப்படத்துக்காக சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
ஒரு காலண்டர் நிறுவனத்துக்காக அவர் நடத்திய அந்த போட்டோ ஷூட்டில் அரை நிர்வாணமாக இருக்கும் அவர் ஒரு இலையை கொண்டு மார்பகங்களை மறைத்துக் கொள்வது போல அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானதை அடுத்து கண்டனங்களையும் சந்தித்துள்ளது.

ஒரு சிலர் கியாரா இந்தியக் கலாச்சாரத்தை குலைக்கும் நடந்து கொண்டதாக சொல்ல அதனை மறுத்த கியாரா ‘இது கலையின் ஒரு பகுதி. அந்த புகைப்படத்தில் ஆபாசம் கிடையாது’ எனப் பதிலளித்துள்ளார்.





