
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. இப்படம் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். விஜயின் அடுத்த திரைப்படத்தில் இவர்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள அவர் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு நபர் அவரின் கையை பிடித்து இழுத்து முத்தமிட்டு விட்டு ஓடினார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராஷ்மிகா அதிர்ச்சி ஆனாலும் சிறிது நேரத்தில் அவர் கூல் ஆகிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.





