Cinema History
எத்தனை பாடல்கள்?.. திருப்தியடையாத தலைவர்.. எம்.எஸ்.வியை அழ வைத்து அனுப்பிய எம்ஜிஆர்!..
எம்ஜிஆரின் கெரியரில் மிகவும் போராட்டமாக வந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம். இந்தப் படம் தொடங்குவதற்கு முன் சில தினங்களுக்கு முன் தான் எம்.எஸ்.வியிடம் எம்ஜிஆர் நாம் கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறாராம். அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.வியும் அந்தப் படத்திற்க்காகத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் போல என ஒரு விதத்தில்மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார்.ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் தான் இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இதில் எந்த வருத்தமும் படவில்லை எம்.எஸ்.வி.
குன்னக்குடி படத்திற்கு தேவையான அனைத்துப் பாடல்களையும் போட்டுவிட்டாராம்.எம்ஜிஆர் அந்தப் பாடல்களை தன் டெக்னிசியன்ஸிடம் போட்டுக் காட்டியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சூப்பர், ஆனால் அந்தப் பாடல் உங்களுக்கு ஏற்றபடி இல்லை என்று சொன்னதும் எம்ஜிஆர் அதை மனதார ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே எ.எஸ்.விக்கு சொல்லியனுப்பியிருக்கிறார் எம்ஜிஆர். ஆனால் எம்.எஸ்,வி வரவில்லையாம்.
அதன் பிறகு குன்னக்குடியே நேராக போய் எனக்கு தரவேண்டிய சம்பளத்தை முழுவதுமாக கொடுத்துவிட்டார்கள் என்றும் அவருக்கு ஏற்றாற் போல் நீங்க தான் இசையமைக்க வேண்டும் என்றும் சொன்னதால் தான் எம்.எஸ்.வி அந்தப் படத்திற்குள் போனாராம். ஆனாலும் எம்.எஸ்.வியின் கெரியரிலேயே அதிக பாடல்களை ஒரு படத்திற்கு போட்டது உலகம் சுற்று வாலிபன் படத்திற்கு தானாம்.
ஏறக்குறைய 108 பாடல்களை போட்டிருக்கிறார். அதில் முதலில் 12 அடுத்து 9 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பாடல்கள் வெளிவந்ததும் அதனை பாராட்டதவர்களே இல்லையாம். அவருடைய அலுவலகத்தில் எம்ஜிஆரிடம் வினியோகஸ்தரர்கள் அனைவரும் ‘எப்படி இந்த மாதிரியான பாடல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?’ என்று பெருமையாக பேசிக்கொண்டிருக்க
அந்த சமயம் எம்.எஸ்.வி வந்திருக்கிறார். உள்ளே வந்தவரை அழைத்து அந்த வினியோகஸ்தரர்களிடம் ‘என்னை இவ்ளோ நேரம் பாராட்டினீர்களே? அதற்கு காரணமானவரே இவர்தான். அதனால் இவரை பாராட்டுங்கள்’ என்று சொன்னதும் எம்.எஸ்.வி அழுது விட்டாராம். இந்த சுவாரஸ்ய சம்பவத்தை மயில்சாமியிடம் எம்.எஸ்.வி சொன்னார் என்று ஒரு பேட்டியின் போது மயில்சாமி தெரிவித்திருக்கிறார்.