8 நாளில் திருமணம்… வீடு புகுந்து கொல்லப்பட்ட பெண் – அதிரவைக்கும் காரணம் !

Published on: February 21, 2020
---Advertisement---

1756bf1c11cf605dfcb4c9d35fc869ce

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது வகுப்புத் தோழன் கத்தியால் குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இன்னும் 8 நாட்களில் அவருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திவ்யாவுடன் பள்ளியில் படித்த அவர்து வகுப்பு தோழனான வெங்கடேஷ் என்பவர் திவ்யாவின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை பற்றி தகவல் அறிந்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசனின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் ‘வெங்கடேசனும் திவ்யாவும் காதலித்ததாகவும் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லியுள்ளனர். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொலை செய்த வெங்கடேசனை தேடும் பணிகளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment