ஹீரோக்களுக்கு சளைத்தவர்கள் இல்லை!.. போலீஸ் கெட்டப்பில் கச்சிதமாக பொருந்திய டாப் நடிகைகள்..

Published on: March 11, 2023
heroine
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு ஆதங்கம் நடிகைகளின் மத்தியில் இருந்து கொண்டே வருகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் ஹீரோயின் சப்ஜக்டாக பார்த்து பல முன்னனி நடிகைகள் பல படங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த கதாபாத்திரம் என்றால் அது அந்த ஹீரோ தான் என்ற நிலையையும் மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் போலீஸ் கெட்டப்பில் பல மாஸ் முன்னனி ஹீரோக்கள் நடித்து ரசிகர்களை திணறித்திருக்கின்றனர்.அதே போல் ஹீரோயின்களில் சிலரும் போலீஸ் கெட்டப்பில் தூள் கிளப்பியிருக்கின்றனர். இதை முன்பே நடிகை விஜயசாந்தி செய்திருந்தாலும் அவருக்கு அப்புறம் நீண்ட கேப் இருந்து கொண்டு தான் வந்திருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக விஜயசாந்திக்கும் மேல் தன் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

nayan

nayan

நடிகை நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன் ரொமான்ஸ்,சாங் என்று மட்டுமில்லாமல் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர். சமீபகாலமாக இவரின் படங்கள் அனைத்தும் சிந்தனைக்கும் மேற்பட்டவை. அந்த வகையில் ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் சும்மா கெத்தாக சிபிஐயாக வந்து கலக்கியிருப்பார்.

jothika
jothika

நடிகை ஜோதிகா : ஆரம்ப காலங்களில் மொழுக் மொழுக் நாயகியாக நடித்து வந்த ஜோதிகா அவர் திருமணத்திற்கு பிறகு தான் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவரும் போலீஸ் கெட்டப்பில் ‘ நாச்சியார்’ படத்தில்  அசத்தியிருப்பார்.

varalakshmi
varalakshmi

நடிகை வரலட்சுமி: இவர் இயல்பாகவே ஹீரோயிசம் கொண்ட நடிகையாக இருக்கிறவர். மேலும் எதையும் தைரியமாக கையாள்பவர். இவர் பல படங்களில் சிபிஐ , போலீஸ் என நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றிருக்கிறார். இவரின் கெத்தான் பேச்சும் திமிரான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

reema
reema

நடிகை ரீமாசென் : முன்னனி நடிகையாக இருந்து அதன் பின் காணாமல் போன நடிகை ரீமா சென். நடிக்க வந்த புதிதில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர். அதன் பின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் போலீஸாக வந்து செம காட்டு காட்டியிருப்பார். அந்த நடிப்பில் அவரது அசாத்திய திறமையும் வெளிப்படும். இப்படி பல நடிகைகள் இன்னும் தங்களை செதுக்கி கொண்டு வருகின்றனர்.