சூப்பர் ஸ்டாருக்கு எதிராக சிம்புவை கொம்பு சீவி விட்ட கமல்… அட இப்படி ஒரு தந்திரமா?..

Published on: March 12, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் என இரு பெரும் நட்சத்திரங்கள் 80களில் இருந்தே தங்களது முத்திரையை பதித்து விட்டனர். அன்று ஆரம்பித்த இவர்களது பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இன்றைய இளம் தலைமுறையினருக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருவரும் சளைக்காமல் தங்கள் உழைப்பை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்குள் தொழில் ரீதியாக போட்டி இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருவரும் பொது மேடையில் மாறி மாறி கட்டி அணைத்து புகழாரம் சூடுகின்றனர்.

rajini1
rajini1

இதை பற்றி பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு  ‘கமலுக்கு எப்படி விக்ரம் படம் மாபெரும் வெற்றி வாகை சூடியதோ அதே அளவுக்கு நாமும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என ரஜினி நினைக்கிறார். அதனால்தான் தான் நடித்து வரும் ஜெய்லர் திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கிடுகிறார்’ என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதையில் தான் இப்பொழுது சிம்பு நடிக்க போகிறார் என்று கூறினார். அதாவது தேசிங்கு பெரியசாமி ரஜினிக்காக சொன்ன கதை தான் சிம்புவுக்கு இடம் மாறியிருக்கிறதாம். ரஜினியே வேண்டாம் என்று சொன்ன கதையை கமல் தேர்ந்தெடுத்து எப்படி தன் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்று கேள்விகள் எழுந்து வந்தன.

rajini2
kamal

அதை தெரிந்தே கமல் இப்படி செய்கிறார் என்றால் அதில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்றும் செய்யாறு பாலு கூறினார். சூப்பர் ஸ்டாரை எதிர்த்து லிட்டில் சூப்பர் ஸ்டாரை கமல் களம் இறக்குகிறார் என்றும் அவர் கூறினார். இது கமலுக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் ஒரு வித போட்டிதான் என்று கூறினார்.

இதையும் படிங்க : கல்யாணம் ஆன ஒரே காரணத்திற்காக ‘பராசக்தி’ பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!.. அடக் கொடுமையே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.