Cinema History
நடிப்பதற்கு முன் இந்த வேலையெல்லாம் செஞ்சாரா பார்த்திபன்!.. ஆச்சர்யமா இருக்கே!..
திரையுலகில் புதுமை என்றால் அது பார்த்திபன்தான். எதை பேசினாலும், எதை யோசித்தாலும் வித்தியாசமாக எதையாவது செய்வார் என்கிற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அவர் உருவாக்கியுள்ளதுதான் அவரின் வெற்றி. அவர் வித்தியாசமாக யோசிப்பவர் என்பதை தனது முதல் படமான புதிய பாதை திரைபப்டம் மூலமே நிரூபித்தார். சினிமா தொடர்பான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் என்ன பேசப்போகிறார் என அனைவரும் எதிர்பார்ப்பது உண்டு.
பொண்டாட்டி தேவை, ஹவுஸ்புல், சுகமான சுமைகள், ஒத்த செருப்பு 7, இரவின் நிழல் ஆகிய படங்களில் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை அமைத்து ரசிகர்களை கவர்ந்தவர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக வெளிவந்த ‘இரவின் நிழல்’ சில விருதுகளையும் பெற்றது. ஒருபக்கம், திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், சினிமாவில் வருவதற்கு முன் தான் செய்த வேலைகள் பற்றி ஒரு யுடியூப் சேனலில் பேசிய பார்த்திபன் ‘எங்க அப்பாவை பார்த்து எனக்கும் நடிக்கும் ஆசை வந்தது. சிவாஜியை போல் நாடகங்களில் நடித்தால் அவரபோல அப்படியே சினிமாவுக்கு சென்று விடலாம் என நினைத்து ஒரு நாடக குழுவில் சேர்ந்தேன். அந்த நாடகம் செங்கல்பட்டு தாண்டித்தான் நடக்கும். எனவே, சினிமாகாரர்கள் யாரும் அதை பார்க்கவே மாட்டார்கள். கோவில்பட்டு போன்ற ஊரில் அந்த நாடகம் நடக்கும். நான் போக நினைப்பது கோடம்பாக்கத்திற்கு. ஆனால், ரயில் திருநெல்வேலி பக்கம் செல்லும்.
நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என நினைத்து கண்ணீர் விடுவேன். ஆனால், நாடகத்தில் நடித்ததுதான் இப்போதும் எனக்கு உதவியாக இருக்கிறது. அதன்பின், நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் வேலை செய்தேன். பானுச்சந்தர் போன்ற நடிகர்களுக்கு எல்லாம் குரல் கொடுத்துள்ளேன். ஒருகட்டத்தில் அதுவும் பிடிக்கவில்லை. அதன்பின்னர்தான் பாக்கியராஜிடம் உதவியாளராக சேர்ந்தேன்’ என அந்த பேட்டியில் பார்த்திபன் கூறியுள்ளார்.
பாக்கியராஜிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்து பின் புதிய கீதை படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் பார்த்திபன் மாறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கதை நாயகன் சூரி….கதாநாயகன் விஜய்சேதுபதி……!! எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் விடுதலை…!