யோகிபாபுவை காதலித்தேன்.. கதறும் துணை நடிகை…வைரலாகும் வீடியோ

Published on: February 21, 2020
---Advertisement---

515ae75e6afbdc1b84814f94e877a3f1

சமீப காலமாக முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை. இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், இவரை ஒருதலையாக காதலித்தேன் ஆனால், அவருக்கு திருமணம் நடந்து விட்டது என துணை நடிகை விஜி என்பவர் அழுது கொண்டே பேசிய ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

ஆனால், அந்த நடிகை யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்ட தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம் என யோகிபாபு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அப்பெண் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment