
சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரம் ஒரு பேருந்து ஒரு இடத்தில் நிற்கிறது. அப்போது கையில் கத்தியுடன் ஏறும் வாலிபர் ஒருவர் டிரைவரை தாக்க முயல்கிறார். டிரைவர் சுதாரித்து அவரிடம் சண்டையிட்டு அவனை வெளியே தள்ள முயல்கிறார். ஆனால், அவன் மீண்டும் மீண்டும் பேருந்தில் ஏற முயல்கிறான்.
அப்போது, பேருந்தில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் வாயில் விசிலை ஊதி சப்தம் எழுப்புகிறேன், மேலும், திருடன் உள்ளே வராதவாறு தனது கால்களால் அவனை எட்டி உதைக்கிறான். இறுதியில் தானியங்கி கதவு மூடப்பட்டு இருவரும் அங்கிருந்து செல்லும் காட்சிகள் அப்பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த சிறுவன் உண்மையில் நிஜ ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.
A thief with a knife got on a bus and attacked the driver but he received help from a disabled child.
A true hero! ❤️pic.twitter.com/dSII4YIvfj— Figen.. (@TheFigen) February 19, 2020





