
Cinema News
20 வருடங்களுக்கு பிறகு ஒன்றிணையும் சிம்ரன், லைலா! – இது சிறப்பான காம்போவால இருக்கு..
Published on
By
தமிழ் சினிமாவில் காம்போ என்கிற விஷயத்துக்கு எப்போதும் அதிக வரவேற்பு இருந்துள்ளது. தனியாக நடித்து வரும் இருவேறு நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும்போது மக்களுக்கு அந்த படத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது.
சினிமாவில் நட்சத்திர காம்போ
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு பிரபலமான நாவல் என்றாலும் கூட படமாக்கப்படும்போது அதில் பல முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்ததால் நாவலை படிக்காதவர்களுக்கு கூட படத்தை பார்க்க கூடிய ஆர்வம் ஏற்பட்டது.
அதே போல விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா, சமந்தா இருவரும் ஒன்றாக நடித்ததால் அந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்சமயம் அதே போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மற்றொரு நட்சத்திர கூட்டணி தற்சமயம் இணைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கிய ஈரம் திரைப்படம் ஆவரேஜான வரவேற்பை பெற்றது. தற்சமயம் இவர் சப்தம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் ஒரு ஹாரர் திரைப்படம் என கூறப்படுகிறது. ஈரம் படத்தில் பேய் எப்படி நீரின் வழியாக வந்து பழி வாங்குகிறதோ அதே போல இந்த படத்தில் பேய் சத்தத்தின் வழியாக பழிவாங்கும் என கூறப்படுகிறது.
சிம்ரன் லைலா காம்போ
இந்த படத்தில் சிம்ரன் மற்றும் லைலா இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் ஆகிய திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பிறகு பிதாமகன் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக தோன்றினர்.
2003 ஆம் ஆண்டு பிதாமகனில் நடித்தப்பிறகு தற்சமயம் மீண்டும் இருவரும் ஒன்றாக இணையும் படமாக சப்தம் திரைப்படம் உள்ளது. எனவே இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...