அஜித்துக்கும் ஃபெப்சிக்குமான பிரச்சனை முடிந்தது – ஆர் கே செல்வமணி விளக்கம் !

Published on: February 21, 2020
---Advertisement---

0df131449f069cf4527d323157135cb2

அஜித் படங்களின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்தப்படாமல் வெளி மாநிலங்களில் நடத்தப்படுவதால் எழுந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. அதற்கானக் காரணம் தமிழகத்தில் எங்கு ஷுட்டிங் வைத்தாலும் அவர் ரசிகர்கள் வந்துவிடுவதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

அனால் ஷூட்டிங்கை இடம் மாற்றுவதால் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை உருவானது. இதனால் தமிழக சினிமா தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழல் உருவானது. இதையடுத்து பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி ‘அஜித்தோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment