">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ராணுவத்தில் கணவன்.. மனைவி டிக்டாக்கில் உல்லாசம்.. குறி வைத்த கூலி படை!
கணவன் ராணுவத்தில் நாட்டிற்காக கஷ்டப்பட, மனைவியோ டிக்டாக் என்றே கெதியாய் கிடந்ததால் விபரம் விபரீதமானது.
டிக்டாக்கில் முகம் சுளிக்கும் வார்த்தைகள் மற்றும் வசனங்களுக்கு தன்னை உட்படுத்தி பொழுதை போக்கி வந்துள்ளார் துணை நடிகையான சுகந்தி. இவருக்கு லைக்குகள் பல இருந்தாலும் சிலர் இவரை திட்டியும் கமெண்டுகள் போட்டு வந்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சுகந்த டிக்டாக்கில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வேறொரு நபர் ஒருவர் சுகந்தியின் ஆபாச டிக்டாக் வீடியோவை கண்டித்து அவரையும், அவரது ஊர் பெண்களையும் அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டார். இதனால் கடுப்பான ஊர் மக்கள் சுகந்தியை ஊரை விட்டே துரத்த முடிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சுகந்தி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின்னர் ஊர்மக்கள் கலைந்து சென்றனர்.
தன் மீது ஏற்பட்டுள்ள கலங்கத்திற்கு காரணமான டிக்டாக் வாலிபர்கள் இரண்டு பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சுகந்தி மதுரை கூலிப்படையைச் சேர்ந்த கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், என்ன ஆனாலும் பரவாயில்லை. அவர்களை கொலை செய்ய வேண்டும். போட்டு தள்ளுவதே என் முடிவு. எந்த கேஸ் ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.
பொழுது போக்காக பயன்படுத்த வேண்டிய டிக்டாக் தற்போது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது. கணவன் நாட்டிற்காக உயிரை கொடுத்து பணி செய்கிறார். குறித்த பெண்ணே உயிரை எடுக்க துணிகிறார்.
என்ன கொடுமை சரவணா இது