திருமணமான பெண்ணின் மீது சபலம் – நடத்துனர் செய்த கொடூரம் !

Published on: February 22, 2020
---Advertisement---

49fdfa17707b133c0b0c1c7186a701e5

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சலோமி என்ற பெண்ணை நடத்துனர் ஒருவர் பெட்ரொல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலோமி(21). மிக சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மேல் பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர் ஒரு தலைக் காதலில் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பேருந்தில் தன் இருக்கைக்கு அருகில் இடம்போட்டு கொடுத்து அவருக்காக காதல் பாடல்களை எல்லாம் போட்டுள்ளார் சுந்தரமூர்த்தி. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல, அவர் தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அண்ணனாக நினைத்துதான் உங்களோடு பழகினேன் என்றும் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமான சுந்தரமூர்த்தி, பெட்ரோல் கேனோடு சலோமி வேலை செய்யும் கடைக்கு சென்று அவர் மேல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதனால் சலோமிக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தியைப் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment