Connect with us
Sridevi and Rajinikanth

Cinema News

ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன இடத்தில் நடந்த அபசகுணம்… காதலை உள்ளுக்குள்ளேயே பூட்டி புதைத்துக்கொண்ட ரஜினிகாந்த்…

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா”, “அடுத்த வாரிசு”, “நான் அடிமை இல்லை” போன்ற பல திரைப்படங்களை உதாரணமாக கூறலாம். மேலும் “16 வயதினிலே”, “மூன்று முடிச்சு” போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

Sridevi and Rajinikanth

Sridevi and Rajinikanth

ரஜினியின் ஒரு தலை காதல்

இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்துக்கு ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியின் மீது காதல் மலர்ந்ததாம். அதாவது ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் ஒரு தலையாக காதலித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்பதற்காக இயக்குனர் மகேந்திரனுடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றாராம். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே மின்சாரம் தடைபட்டிருக்கிறது. அபசகுணமாக இருக்கிறதே என்று எண்ணி அவர்கள் எதுவும் பேசாமல் அப்படியே திரும்பிவிட்டார்களாம்.

Sridevi and Rajinikanth

Sridevi and Rajinikanth

அபசகுணம்

அன்று மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றால் ஸ்ரீதேவியின் தாயாரிடம் நிச்சயமாக ரஜினிகாந்த் பெண் கேட்டிருப்பாராம். இந்த சம்பவத்தை இயக்குனர் மகேந்திரன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளாராம்.

ரஜினிகாந்த் பின்னாளில் லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதையும், ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்துகொண்டார் என்பதையும் பலரும் அறிவார்கள். அன்று மட்டும் அந்த அபசகுணம் நேராமல் இருந்திருந்தால் ரஜினியின் வாழ்க்கையே வேறு மாதிரி ஆகி இருக்க வாய்ப்பு உண்டு.

இதையும் படிங்க: இந்த பிரபல சீரீயல் முடிவுக்கு வந்ததுக்கு இதுதான் காரணமா? அவசரத்தில் வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜய் டிவி கோமாளி…

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top