ஹோட்டல் வாடகை கொடுக்காமல் எஸ்கேப் – தனுஷ் பட நடிகைக்கு என்ன ஆச்சு?

Published on: February 22, 2020
---Advertisement---

686688aece97db3b4658fd0358c30a40

அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படம் கடந்த 31ம் தேதி வெளியானது. இப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் தனக்கு  ஸ்கின் அலர்ஜி எனக்கூறி எனவும் , புரமோஷனில் கலந்து கொள்ள முடியாது எனவும் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் அப்படியெனில் ஹோட்டல் பில்லை நீங்களே கட்டிவிடுங்கள் எனக்கூறிவிட்டார். ஆனால், மெஹ்ரின் பணம் எதுவும் கட்டாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின், தயாரிப்பாளை நச்சரித்து ஹோட்டல் நிர்வாகம் பணத்தை வாங்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment