முதன்முதலில் மூச்சு விடாமல் பாடியது இந்த பாடகர்தான்-அப்போ எஸ்.பி.பி. கிடையாதா?

Published on: March 21, 2023
SP Balasubrahmanyam
---Advertisement---

இந்த உலகை விட்டு மறைந்தாலும் நம் மனதில் விட்டு என்றும் நீங்காதவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் தனது வசீகரமான குரலால் இந்திய இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் எஸ்.பி.பி.

Keladi Kanmani
Keladi Kanmani

மூச்சு விடாமல் பாடிய எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பல சாதனைகளை புரிந்திருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாக பலரும் பார்ப்பது அவர் மூச்சு விடாமல் பாடிய பாடல்தான். “கேளடி கண்மணி” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “மண்ணில் இந்த காதல் அன்றி” என்று தொடங்கும் பாடலின் இரு சரணங்களையும் மூச்சு விடாமல் பாடியிருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

TM Soundararajan
TM Soundararajan

இந்த நிலையில் பிரபல பாடகரான டி.எம்.சௌந்தரராஜன் குறித்த ஆவணப்படத்தை உருவாக்கி வரும் இயக்குனர் விஜய்ராஜ் என்பவர் டி.எம்.சௌந்தரராஜனை குறித்த ஒரு அரிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Vijay Raj
Vijay Raj

டி.எம்.சௌந்தரராஜன்தான்…

அதாவது பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் முதன்முதலில் மூச்சுவிடாமல் பாடினார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் விஜய்ராஜ், டி.எம்.சௌந்தரராஜன்தான் முதன்முதலில் மூச்சு விடாமல் பாடினார் என்று கூறுகிறார்.

Ambikapathy
Ambikapathy

1957 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளியான “அம்பிகாபதி” திரைப்படத்தில் இடம்பெற்ற “வடிவேலும் மயிலும் துணை” என்ற பாடலில் டி.எம்.சௌந்தரராஜன் மூச்சு விடாமல் பாடியிருக்கிறாராம். அந்த பாடலை பதிவு செய்தபோது மூச்சு விடாமல் பாடிய டி.எம்.சௌந்தரராஜன் அப்படியே மயங்கி விழுந்துவிட்டாராம். அந்த அளவுக்கு தனது தொழிலில் நேர்த்தியாக இருந்தாராம்.

இதையும் படிங்க: விடுதலை படத்தில் ஸ்டண்ட் கலைஞர் இறந்ததற்கு காரணம் இதுதான்!.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.