Home News Reviews Throwback Television Gallery Gossips

திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி – கதை தயார் செய்த இயக்குனர்

Published on: December 21, 2019
---Advertisement---

7ec474718b3f75050124fbc22f9525e2

திருநங்கை வேடத்தில் நடிக்க தனக்கு ஆசை உள்ளதாக ரஜினி தெரிவித்திருந்த நிலையில் தாதா87 படத்தின் இயக்குனர் அவருக்காக கதை ஒன்றை தயார் செய்து உள்ளதாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி எப்பொழுதுமே நெகட்டிவ் வேடங்களை ஏற்று நடிப்பதில் திறமையானவர். ஆரம்பகாலத்தில் அவர் வில்லன் நடிப்பில் அசத்தி அதன் மூலமாகவே கதாநாயகன் ஆனார் என்பதை தமிழக அரசியலில் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ரஜினி தனக்கு திருநங்கை வேடத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக கூறி இருந்தார்.

அதனை முன்னிட்டுதாதா 87’ என்ற படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தன் திறமையை அடிப்படையாக வைத்து ஒரு கதை உருவாகியுள்ளதாகவும் அதில் ரஜினி நடித்தால் திருநங்கையர்கள் பற்றிய சமூக விழிப்புணர்வு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment