Connect with us
mgrr

Cinema News

பாசக்கார ரசிகனுக்கு எம்.ஜி.ஆர் தந்த பரிசு!.. நாளை நமதே படப்பிடிப்பில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!!….

எம்.ஜி.ஆர் என்றாலே உதவும் கரம், கொடை வள்ளல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர், என்று பல்வேறு பெயர்களால் போற்றப்பட்டவர். தமிழக மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்தவர். தமிழகம் மற்றுமின்றி பிற மாநிலத்திலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளாத்தையே வைத்திருந்தவர். எங்கேயும், எப்போதும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அந்த விஷயத்தை உன்னிப்பாக கவனிப்பார்.

mgr

mgr

.அப்படித்தான் ஒரு நாள் நாளை நமதே திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் சில காட்சி பெங்களூர் விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்கு எராளமான கூட்டம் வந்திருந்தது. அப்போது திடிரென்று கேமரா இருந்த இடத்தை தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர் மேலே பார்த்தப்படி “கிழே இறங்கு, கிழே இறங்கு” என்று சத்தம் போட்டார்.

அங்கு நின்ற எல்லோரும் மேலே பார்த்தனர், அப்போது ரசிகர் ஒருவர் மின் கம்பத்தில் எறிக்கொண்டிருந்தார். உதவியாளர்களை அனுப்பி அவரை கீழே வர வைத்த எம்.ஜி.ஆர் அவரிடம் விசாரித்தார். அவர் ஒரு குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளி என்றும், தன்னை இந்த கூட்டத்தில் பார்க்க முடியாத காரணத்தால் தான் மின்சார கம்பத்தில் ஏறி தன்னை பார்க்க முயன்றுள்ளார் என்பது தெரிய வந்தது .

mgr 2

mgr 2

அந்த ரசிகனை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே அவருக்கு ஒரு நாற்காலி கொடுத்து, மதிய உணவு கொடுத்தும் அன்று முழுவதும் அந்த படப்பிடிப்பை பார்க்கச் செய்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த ரசிகரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொடுத்தும்,  500 ரூபாயும் அன்பளிப்பாக கொடுத்தார்.

இங்கு நடந்தது கனவா, நினைவா என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைப்பெற்றார் அந்த ரசிகர். இந்த சம்பவம் படப்பிடிப்பில் இருந்தவர்கள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது….

Continue Reading

More in Cinema News

To Top