தமிழ் சினிமாவில் உன்னதமான கலைஞன் என அனைவராலும் பாராட்டப்படுபவர் நடிகரும் உலகநாயகனுமான கமல்ஹாசன். இவர் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே பல பேர் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் தன் குழந்தை வயதிலேயே நடிக்க வந்ததால் சினிமாவில் இருக்கும் சின்ன சின்ன நுணுக்கங்களையும் நன்றாக அறிந்தவர்.

வளரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்து வருகிறார். மேலும் சினிமா சம்பந்தமான புது புது தொழில் நுட்ப முறைகளையும் கொண்டு வந்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் பெருமையும் கமலையே சேரும்.
அதுமட்டுமில்லாமல் முன்பு ஒரு பேட்டியில் கூறிய அனைத்து செய்திகளும் இன்று நிகழ்காலத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதாவது வருங்காலத்தில் ஓடிடி தளமாகத்தான் சினிமா மாறும் என சொன்னவரும் கமல் தான் அதே மாதிரி சாட்டிலைட்டிலும் அடுத்தக் கட்ட நகர்வு இருக்கும் என சொன்னவரும் கமல் தான்.

இப்போதைய சினிமா தொழில் நுட்பங்களை முன்னதாகவே அறிந்து வைத்தவர். இந்த நிலையில் அடிக்கடி அவர் வெளியூருக்கும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு பக்கம் தொழில் நுட்பங்களை பற்றி அறியவே அவர் வெளி நாடு செல்வதாக கூறினார்கள்.
ஆனால் உண்மையில் இருக்கும் காரணம் என்னவென்றால் அவர் ஏற்கெனவே மருதநாயகம் படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்க ஆனால் அது பாதியிலேயே கைவிடப்பட்டது. ஆனால் எப்பொழுதாவது மீண்டும் அந்த படத்தை எடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். அந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவுகளை இங்கு உள்ள யாராலும் கொடுக்க முடியாதாம்.

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் , புஷ்பா போன்ற படங்களின் செலவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்குமாம். அதன் காரணமாகவே வெளி நாட்டில் இருக்கும் பட தயாரிப்பாளர்களிடம் உதவியை நாடுவதாக கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர் அடிக்கடி வெளி நாடு சென்று வருகிறார் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறுகிறார்.
இதையும் படிங்க : கிளியை வளர்த்தேன்.. தூக்கிட்டாங்க.. இப்ப இத வளர்க்குறேன்!.. தில்லு இருந்தா வாங்க.. சவால் விடும் ரோபோ சங்கர்..
