
Cinema News
படத்தில் நடிக்காத இரு நாயகிகளுக்கும் எம்ஜிஆர் வைத்த சீனைப் பாருங்க…! அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..!
Published on
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமாவைப் பற்றி அக்கு வேறு ஆணி வேராக அறிந்தவர். அதனால் அவர் சினிமா சம்பந்தமான அத்தனை திறமைகளையும் கொண்டு இருந்தார். அவரே ஒரு படத்தையும் தயாரித்து அதில் நடித்து இயக்க முடிவு செய்தார்.
அந்தப் படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் சிற்பம் போன்று செதுக்கினார். அவருக்கு எந்த ஒரு காட்சியும் திருப்தி இல்லாமல் போனால் விடவே மாட்டார்.
திரும்ப திரும்ப நடிக்க வைப்பார். அவரைப் போன்ற பிடிவாத குணம் கொண்டவர் நடிகை பானுமதி. அவர் நடித்த சில காட்சிகளில் திருப்தி இல்லாத எம்ஜிஆர் திரும்ப திரும்ப நடிக்க வைத்தார்.
ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த பானுமதி எத்தனை தடவை ஒரே காட்சியைத் திரும்ப திரும்ப எடுப்பீங்க. வேற யாரையாவது டைரக்டரா போட்டு எடுத்திருக்கலாம் அல்லவா என்று கேட்டார்.
MGR, Banumathi
அதைக் கேட்டதும் எம்ஜிஆர் இந்தப் படத்தோட தயாரிப்பாளரும், இயக்குனரும் நான் தான். எனக்கு திருப்தி இருந்தால் தான் காட்சியை எடுத்து முடிப்பேன். இல்லாவிட்டால் இப்படி தான் எடுப்பேன். உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லாவிட்டால் போங்க என்று சொல்லி விட்டார்.
தொடர்ந்து அந்தப் படத்தில் பானுமதி இறந்தது போல காட்சி அமைத்தார். அதைத் தொடர்ந்து சரோஜாதேவியை 2வது கதாநாயகியாக நடிக்க வைத்தார். இதே போன்று இன்னொரு சம்பவமும் நடந்தது.
1967ல் எம்ஜிஆருக்குத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. வீட்டிலேயே இருந்து குரல் சிகிச்சை பெற்றார். அவரால சினிமாவுல நடிக்க முடியாது.
அப்படியே நடிச்சாலும் அவர் முன்பு போல அவரால நடிக்க முடியாது. அப்படி தன்னையும் அறியாமல் தனக்கு நெருக்கமானவங்கக் கிட்ட சரோஜாதேவியும் இப்படி எல்லாம் சொன்னதாக ஒரு செய்தியை எம்ஜிஆர் தரப்பினர் கிட்ட சொன்னாங்க.
Arasakattalai
சரோஜாதேவியின் அம்மாவும் ஒரு பேட்டியில இனி எம்ஜிஆரோட என் மகள் நடிக்க மாட்டான்னு சொன்னாங்க. இது எம்ஜிஆர் ரசிகர்களை ரொம்பவே வருத்தம் அடையச் செய்தது. அப்போது அரசகட்டளையின் இறுதிக்காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது சரோஜாதேவி இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவோட காட்சிகள் அதிகமாக்கப்பட்டு முடிவில் அவரையே திருமணம் செய்வது போலவும் காட்டப்பட்டது. கதை முழுக்கப் போராடிய இளவரசியான சரோஜாதேவி இறந்ததும் பொருத்தமானதாக இல்லை என்றாலும் மக்கள் அதை ஏத்துக்கிட்டாங்க.
நாடோடி மன்னன் படத்துல சரோஜாதேவியைக் கொண்டு வர பானுமதி எப்படி வெளியேற்றப்பட்டாரோ அதே மாதிரி அரசகட்டளையில் சரோஜாதேவியும் வெளியேற்றப்பட்டாங்க.
அதன்பிறகே எம்ஜிஆரின் திரை உலக வாழ்வில் ஜெயலிலதா நீங்காத இடம்பெற்றார். நாடோடி மன்னன் கதையை மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க நினைத்தார் எம்ஜிஆர். இதுல சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா என இரு கதாநாயகிகளை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
Adimai pen 2
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு குண்டு பாய்ந்த தருணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்ததால் ஜெயலலிதாவிற்கு கைமாறு செய்யும் வகையில் இந்தப் படத்தில் இரு வேடத்தையும் அவருக்கேக் கொடுத்தார்.
அதுதான் அடிமைப் பெண். அப்போது உடல் நலம் கொஞ்சம் தேறி வந்ததால எம்ஜிஆர் தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு இயக்குனர் கே.சங்கரை இயக்க வைத்தார்.
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின்...
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...