ஜகமே தந்திரம் போஸ்டரும் சுட்டதுதான் –  எங்கிருந்து தெரியுமா ?

Published on: February 23, 2020
---Advertisement---

c93f7154553d0f2e43d18d9df137ffa0

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் புகழ்பெற்ற கடைசி உணவு எனும் ஓவியத்தில் இருந்து உருவப்பட்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அதனோடு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது. குறிப்பிட்ட ஒரு போஸ்டரில் தனுஷ் நடுவில் அமர்ந்திருக்க, அவருக்கருகில் வரிசையாக பலர் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டர் லியானர்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற ஓவியமான த லாஸ்ட் சப்பர் (The last Supper) என்ற ஓவியத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சிலர் சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் இரு படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியும் வருகின்றனர்.

Leave a Comment