நடிகை சௌந்தர்யாக்கு நேர்ந்த விபத்து… எமனாக வந்து உயிரைபறித்த பறவை! இதுதான் காரணமா?

Published on: March 26, 2023
Soundarya
---Advertisement---

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பேன் இந்திய மொழிகளில் 90களிலும் 2000களிலும் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழில் “அருணாச்சலம்”, “காதலா காதலா”, “படையப்பா”, “தவசி” போன்ற பல திரைப்படங்களில் நடித்த சௌந்தர்யா தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார்.

Soundarya
Soundarya

எதிர்பாரா விபத்து

இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சௌந்தர்யா பெங்களூரில் இருந்து அன்றைய ஆந்திராவின் கரீம்நகர் பகுதிக்கு தனது சகோதரருடன் தனி விமானத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு விமானம் கவிழ்ந்தது. இதில் சௌந்தர்யா, அவரது சகோதரர், மேலும் அவர்களுடன் பயணித்த இருவரும் பலியானார்கள். இந்த சம்பவம் அப்போதைய திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியது.

Soundarya
Soundarya

இச்சம்பவத்தை தொடர்ந்து இந்த விபத்து குறித்தான விசாரணை தொடங்கியது. சௌந்தர்யா பாரதிய ஜனதா கட்சியில் அப்போது இணைந்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காக சௌந்தர்யா விமானத்தில் சென்றபோதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது. ஆதலால் இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்குமோ என அப்போது சந்தேகங்கள் எழுந்தன. அதே போல் விமானத்தின் தரமும் சந்தேகத்திற்கு இடம் அளித்தது. ஆனால் தீவிர விசாரணைக்குப் பிறகு இந்த இரண்டும் காரணங்கள் இல்லை என தெரிய வந்தது.

பறவைகளால் நேர்ந்த விபரீதம்

இதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில்தான் ஒரு உண்மை தெரிய வந்ததாம். அதாவது அந்த விமானம் கிளம்பிய ரன்வே பகுதியை சுற்றி பல உணவகங்கள் இருந்ததாம். அந்த உணவகங்களில் வீணாகப்போன உணவு பொருட்களை சாப்பிட நிறைய பறவைகள் அங்கு வருமாம். அவ்வாறு சௌந்தர்யா பயணித்த விமானம் தரையில் இருந்து 100 அடி மேலே பறக்க ஆரம்பித்த போது பல பறவைகள் அங்கு பறந்திருக்கின்றன. இது சீரான பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது.

Soundarya
Soundarya

அந்த பறவைகளை திசைதிருப்ப விமானிகள் முயற்சி செய்திருக்கின்றனர். அந்த முயற்சியில்தான் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. சௌந்தர்யா கடந்த 2003 ஆம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்திருந்தார். சௌந்தர்யா விபத்தில் பலியானபோது அவர் இரண்டு மாத கர்ப்பத்தோடு இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமா வாய்ப்புக்காக பிரபல இயக்குனரிடம் எடுபிடியாக இருந்த டி.எம்.எஸ்… ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கஷ்டமா?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.