ரஜினிக்கு பதில் சிம்புவா? இவ்வளவு பெரிய சீக்ரெட்டை ஒளிச்சி வச்சிருக்கீங்களே!!

Published on: March 27, 2023
Pathu Thala
---Advertisement---

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வருகிற 30 ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் “பத்து தல”. இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் “பத்து தல” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்தது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது.

Pathu Thala
Pathu Thala

மாஸ் வசனங்கள்

“பத்து தல” திரைப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “மஃப்டி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். “பத்து தல” திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் மாஸாக இருந்தது. இதனை பார்க்கும்போது திரைப்படத்தில் வசனங்கள் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “பத்து தல” படத்தின் வசனக்கர்த்தாவான ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

R.S.Ramakrishnan
R.S.Ramakrishnan

ரஜினி இடத்தில் சிம்பு

“இந்த படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரத்திற்கு முதலில் பல உச்ச நடிகர்களிடம் படக்குழுவினர் பேசிப்பார்த்தார்கள். ஆனால் ரீமேக் படம் என்பதால் நடிக்க தயங்கினார்கள். ஆனால் இப்போது ரீமேக் படம் என்று கூறமுடியாதபடி பல விஷயங்களை மாற்றியமைத்திருக்கிறோம். மேலும் சிம்பு கதாப்பாத்திரத்தை மிக பவர்ஃபுல்லான கதாப்பாத்திரமாக வடிவமைத்திருக்கிறோம். இந்த படத்தை பார்க்கும் நடிகர்கள் இந்த படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்று நினைப்பார்கள்” என கூறியுள்ளார்.

Pathu Thala
Pathu Thala

மேலும் பேசிய் அவர், “உதாரணத்திற்கு இந்த படத்தில் ரஜினி சார் நடிக்கவில்லை. அவருக்கு பதில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்புவை ரஜினியாக மாற்றியிருக்கிறார் இயக்குனர். ரஜினிகாந்த் நடிப்பது போன்ற கதைதான் இது. சிம்பு ஒரு சிங்கம் போல் இருப்பார் இந்த படத்தில்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அந்த பாடகர் எனக்கு பாட வேண்டாம்!.. அடம்பிடித்த சிவாஜி!.. எதற்காக தெரியுமா?!..

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.