அந்த சீன்ல விஜய் கார்த்திக்கை காப்பி அடிச்சார்!.. போட்டு உடைத்த முருகதாஸ்!…

Published on: March 28, 2023
vijay
---Advertisement---

திரையுலகில் ஒரு பெரிய நடிகரின் பாதிப்பு பல நடிகர்களிடமும் பார்க்க முடியும். சிலருக்கு அது தமிழ் நடிகராக இருக்கும். சிலருக்கு அவர்களுக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர்களின் பாதிப்பு கூட இருக்கும். எந்த நடிகரின் பாதிப்புமே இல்லமால் தனித்துவத்துடன் நடிக்கும் நடிகர்கள் மிகவும் குறைவு. நாயகன் படத்தில் நடித்த போது ‘காட் ஃபாதர்’ படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவை மனதில் வைத்தே கமல் சில காட்சிகளில் நடித்திருப்பார். சிவாஜிக்கு பின் நடிக்க வந்த பல நடிகர்களிடம் சிவாஜியின் பாதிப்பு இருந்தது.

rajini
rajini

அதேபோல்தான் ரஜினிக்கு பின்னால் வந்த நடிகர்கள் பலருக்கும் ரஜினியின் சாயல் இருக்கும். குறிப்பாக ஸ்டைலாக சண்டை போடுவது,ஸ்டைலாக நடப்பது, ஸ்டைலாக வசனம் பேசுவது, பஞ்ச் வசனம் பேசுவது ஆகிய காட்சிகளில் பல நடிகர்கள் ரஜினியை இப்போதும் காப்பி அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர். ஹேர்ஸ்டைல் முதல், நடனம், நடிப்பு, ஸ்டைல் என எல்லாவற்றிலும் அவர் ரஜினியை காப்பி அடிப்பார். இதை அவரே பல மேடைகளில் ஒத்துக்கொண்டுள்ளார். சில நடிகர்கள் சில காட்சிகளில் கமலை கூட பின்பற்றுவார்கள்.

nayagan

ஆனால், திரையுலகில் எந்த நடிகரின் சாயலும் இன்றி நடித்த நடிகர்களில் கார்த்திக் முக்கியமானவர். 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர். அவரின் உடல் மொழியும், வசன உச்சரிப்பும், துள்ளலான நடிப்பும் எந்த நடிகரிடமும் பார்க்க முடியாது. அதனால்தான் எல்லோருக்கும் பிடித்தமான நடிகராக கார்த்திக் இருந்தார்.

karthik

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு கண்டிப்பாக ரஜினியின் பாதிப்பு இருக்கும். அவரின் பாதிப்பு இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கவே முடியாது. அதேபோல், காதல் காட்சி என்றால் அது கார்த்திக் மட்டுமே.

murugadas
murugadas

நான் இயக்கிய துப்பாக்கி படத்தின் ஒரு காட்சியில் விஜய் காஜல் அகர்வாலிடம் ஜெயராமை காண்பித்து ‘அவர் என்னை விட நல்லவர், வயதில் பெரியவர், அவரையே திருமணம் செய்து கொள்’ என சொல்வார். அந்த காட்சி எடுக்கும்போது எனக்கு கார்த்திக்தான் ஞாபகத்திற்கு வந்தார். இந்த வசனத்தை அவர் எப்படி சொல்வார் என யோசித்தேன். நீங்கள் படம் பார்க்கும் போது விஜய் கார்த்திக்கைத்தான் காட்டியிருப்பார்’ என முருகதாஸ் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: கோபத்தில் அனலாய் கொந்தளித்த டி.எம்.எஸ்… வீட்டிற்கே சென்று காலில் விழுந்த எம்.எஸ்.வி…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.